மியூசிக்கல் டூரை துவக்கினார் பிரிட்னி ஸ்பியர்ஸ்
மியூசிக்கல் டூரை துவக்கினார் பிரிட்னி ஸ்பியர்ஸ்
மியூசிக்கல் டூரை துவக்கினார் பிரிட்னி ஸ்பியர்ஸ்
ADDED : செப் 19, 2011 12:05 PM

பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், தனது 2 மாத மியூசிக்கல் டூரை துவக்கினார். Femme Fatale ( வசீகரப் பெண்) என தனது ஐரோப்பிய இசை சுற்றுப்பயணத்துக்கு பெயரிட்டுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். செப்டம்பர் 22ம் தேதி ரஷ்யாவின், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் முதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடைசி நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதியன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் முடிவடைகிறது.
இசை நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னதாகவே தனது காதலருடன் ரஷ்யா வந்துள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். ரஷ்யாவுக்கு வரும் வழியில் லண்டனில் தங்கிய பிரிட்னி, லண்டன் தன் மனதுக்கு மிக நெருக்கமான ஊர் என்றும், தனது அடுத்த ஆல்பம் கிரிமனல்- க்காக முக்கிய படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


