/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சி எதிரொலி: ஒருவர் அதிரடி கைதுபோலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சி எதிரொலி: ஒருவர் அதிரடி கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சி எதிரொலி: ஒருவர் அதிரடி கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சி எதிரொலி: ஒருவர் அதிரடி கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சி எதிரொலி: ஒருவர் அதிரடி கைது
ADDED : செப் 17, 2011 01:19 AM
ப.வேலூர்: புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, வாலிபர் ஒருவர், போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, ஒருவரை அதிரடியாக கைது செய்து, ப.வேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.ப.வேலூரில், சக்தி (32), குமார் (28) ஆகிய இருவரும் கூட்டாக ஆட்டோ மொபைல் பட்டறை நடத்தி வருகின்றனர். அவர்களிடம், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பிடார்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தனது டிராக்டரை சரி செய்வதற்காக, கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொண்டு வந்துள்ளார்.அந்த டிராக்டரை, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து முற்றிலுமாக சரி செய்தனர். இந்நிலையில், கடை உரிமையாளர்களான சக்தி, குமார் ஆகியோர் இல்லாத நேரத்தில், அங்கு வந்த ப.வேலூர் மீனாட்சிபாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர், ஊழியர்களை மிரட்டி, டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளார். அது குறித்து, ப.வேலூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
ஆனால், அந்த புகார் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்தனர். அதனால் மனமுடைந்த சக்தி, நேற்று முன்தினம் காலை, ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரை மீட்டு ப.வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., தம்பிதுரை, விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து, சேகரை (40) கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, 7 பேரை தேடி வருகின்றனர்.