ADDED : செப் 16, 2011 11:33 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங், மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
உடுமலை, காங்கயம், ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம், வெள்ளகோவில், தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், பணியிடம் இல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் கேட்டு 27 பேர் விண்ணப்பித்தனர். அதனால், காலியாக உள்ள 11 தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டது.பதவி உயர்வு கேட்டு விண்ணப்பித்த 37 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. பட்டதாரி தமிழ் ஆசிரியர் மாறுதல் கேட்டு 28 பேர்; பட்டதாரி தமிழ் ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர் பதவி உயர்வு கேட்டு 37 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கும் நேற்றே பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.