Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம்

ADDED : செப் 16, 2011 09:51 PM


Google News

சரவணம்பட்டி : கோவையில் டிராபிக் வார்டன், போலீஸ், 'யங் இந்தியன்' அமைப்புகள் இணைந்து, கோவையில் சாலைபாதுகாப்பு வாரத்தை இன்று முதல் துவக்குகிறது.

இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 1100 மாணவர்களை தேர்வு செய்து, பாதுகாப்பு விதிமுறைகளை விளக்க உள்ளனர். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு வித்தியாசமான போட்டிகளிலிருந்து, போக்கு வரத்து விதிமுறைகளை கற்றுக்கொள்ளும் விதத்தில் இவை அமைந்திருக்கும். குறிப்பாக, 'பிளட் பக்கெட்', புன்னகை போட்டி, ரங்கோலியில் போக்குவரத்து குறியீடுகள், சிக்னல், பிஸ்கட் ஜம்பிங், வார்த்தை விளையாட்டு, ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகள் சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரியில் நடக்க உள்ளன. இத்தகவலை, டிராபிக் வார்டன் அமைப்பு வெளியிட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us