/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆறு பேர் கொலை வழக்கு சிவகுரு ஜாமீன் மனு தள்ளுபடிஆறு பேர் கொலை வழக்கு சிவகுரு ஜாமீன் மனு தள்ளுபடி
ஆறு பேர் கொலை வழக்கு சிவகுரு ஜாமீன் மனு தள்ளுபடி
ஆறு பேர் கொலை வழக்கு சிவகுரு ஜாமீன் மனு தள்ளுபடி
ஆறு பேர் கொலை வழக்கு சிவகுரு ஜாமீன் மனு தள்ளுபடி
ADDED : செப் 16, 2011 01:38 AM
சேலம்: சேலம், தாசநாயக்கன்பட்டி ஆறு பேர் கொலை வழக்கில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த சிவகுரு, அவரது மகன் கோகுல்நாத் ஆகியோரது ஜாமீன் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
சேலம், தாசநாயக்கன்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஆறு பேர், கடந்த ஆண்டு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீஸார், குப்புராஜ் மகன் சிவகுரு, அவரது மகன் கோகுல்நாத், மருமகன் ரஜினி, மகள் யுவப்பிரியா, மனைவி மாலா, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், செந்தில், சேகர், சம்பத் உள்ளிட்ட, 9 பேரை கைது செய்தனர். இதில், சிவகுரு மற்றும் அவரது மகன் கோகுல்நாத் ஆகிய இருவர் தவிர்த்து, மற்ற ஏழு பேரும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இவ்வழக்கில், ஜாமீன் கேட்டு, சிவகுரு மற்றும் அவரது மகன் கோகுல்நாத் இருவரும், சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மாவட்ட நீதிபதி பாஸ்கரன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


