ADDED : செப் 13, 2011 01:01 AM
அப்பன் திருப்பதி : அழகர்கோவிலிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நேற்று மாலை 6.45 மணிக்கு கள்ளந்திரி பாலம் அருகே அரசு டவுன் பஸ் வந்தது.
சிலர் உருட்டுக் கட்டைகள், கற்களால் பஸ் மீது தாக்குதல் நடத்தினர். பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து அழகர்கோவில் நோக்கி இரவு 8.50 க்கு கள்ளந்திரி பூவக்குடி கண்மாய் அருகே சென்ற அரசு டவுன் பஸ் மீது சிலர் கற்கள், கட்டைகளால் தாக்கினர். டிரைவர் விஜயகுமார், பயணிகள் மணிராஜ், ராஜா காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ்கள் நிறுத்தம்: மேலூரில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் 38 டவுன் பஸ்கள் நேற்றிரவு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பணி முடிந்து மழையில் நனைந்தபடியே பெண்களும், குழந்தைகளும் பஸ் நிறுத்தப்பட்ட விபரம் தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் குவிந்து இருந்தனர். வேன், சரக்கு வேன்களில் கேட்கப்பட்ட அதிக கட்டணத்தை கொடுத்து அவற்றில் கிõரமமக்கள் ஏறி ஆபத்தான பயணத்தை தொடர்ந்தனர்.