ADDED : செப் 08, 2011 11:19 PM
பந்தலூர் : பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி வழியாக கேரளா மாநிலத்துக்க
மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பந்தலூர் அடுத்துள்ள
மாங்கோடுகக்குண்டி வழியாக நேற்று முன்தினம் இரவு மணல் லாரி ஒன்று
சென்றுள்ளது. அதனை அம்பலமூலா போலீஸ் தலைமை காவலர் மணிகண்டன் ஆய்வு
செய்தபோது, எந்தவித ஆவணங்களுமின்றி ஊழக்குண்டு சோதனை சாவடிவழியாக கேரளா
மாநிலத்துக்கு மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. அதனையடுத்து மணல்
லாரி(டிஎன்60 எக்ஸ் 0445) பறிமுதல் செய்து, குந்தலாடி பகுதியை சேர்ந்த லாரி
டிரைவர் மைதீன்குட்டி(31) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கூடலூர் ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.