அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : செப் 06, 2011 10:37 PM
தூத்துக்குடி: மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு, தூத்துக்குடி மாவட்ட கோர்ட் ஒத்திவைத்தது.
ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை கொலை செய்ய தூண்டியது, இங்குள்ள நகர தி.மு.க., அலுவலகத்திற்கு, தீ வைக்க தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய, மூன்று வழக்குகளில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இம்மூன்று வழக்குகளிலும், ஜாமின் கோரி அவர், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று நீதிபதி பிரபுதாஸ் முன்னிலையில், மனு மீது விசாரணை நடந்தது. அரசு வழக்கறிஞர் சந்திரசேகர், ''அனிதா ராதாகிருஷ்ணனை, கடைசி இருவழக்குகளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்திருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென,''வலியுறுத்தினார். இதற்கு, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.