Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் சாதிப்பர்!'

"விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் சாதிப்பர்!'

"விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் சாதிப்பர்!'

"விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் சாதிப்பர்!'

ADDED : செப் 04, 2011 11:19 PM


Google News
கோவை : மாவட்ட அளவில் பள்ளி மாணவருக்கான கிழக்கு குறுமைய தடகள போட்டியில் டி.என்.ஜி.ஆர்.,மேல் நிலை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை கல்வி மாவட்ட உடற்கல்வி கழகம், ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவருக்கான தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், 31 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள்,14 வயதுக்குட்பட்ட ஜூனியர், 17 வயதுக்குட்பட்ட சீனியர், 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவர்கள் 689 பேர் போட்டியில் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., ஆயிரத்து 500மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டிஎறிதல், போல்வால்ட், 4*100மீ., 4*400மீ., தொடர் ஓட்டம், 100மீ.,தடைஓட்டம் ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில், டி.என்.ஜி.ஆர்.,மேல்நிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பதினான்கு வயது பிரிவில் பத்மாவதி அம்மாள் பள்ளியும், 17 வயது பிரிவில் நேஷனல் மாடல் பள்ளியும், 19 வயது பிரிவில் கே.கே.நாயுடு பள்ளியும் அதிக புள்ளிகள் பெற்றன. ஜூனியர் பிரிவில் சி.ஆர்.ஆர்.,பள்ளி மாணவன் விக்னேஷ், பத்மாவதி அம்மாள் பள்ளியின் கேசவன், வித்யாமந்திர் பள்ளியின் ஆதர்ஷ் ஆகியோர் சாம்பியன் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.சீனியர் பிரிவில் நேஷனல் மாடல் பள்ளியின் பிரவீனும், சூப்பர் சீனியர் பிரிவில் கே.கே.நாயுடு பள்ளியின் துரைமுருகனும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் வரவேற்றார். எஸ்.என்.எஸ்.,கல்லூரி சேர்மன் சுப்ரமணியன் பரிசளித்து பேசுகையில்,''விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவோர், வாழ்க்கையிலும் பல சாதனைகளைப் படைப்பர். வாழ்க்கையின் வெற்றி, தோல்வியை ஒரே மாதிரியாக எதிர்கொள்கிற மனப்பக்குவம், மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகமாக இருக்கும். அவர்கள், சிறந்த வல்லுனர்களாகவும், மனந்தளராமல் உறுதி எண்ணத்துடனும் செயல்படுவார்கள்,'' என்றார். ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us