/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வலியுறுத்தல்சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வலியுறுத்தல்
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வலியுறுத்தல்
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வலியுறுத்தல்
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2011 11:07 PM
கடலூர் : சம்பா பருவத்திற்கு நாற்று விடும் விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விதைச்சான்று உதவி இயக்குனர் அரிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்திற்கு நெல் நாற்று விடும் பணி துவங்கியுள்ளது. நாற்றுவிட உள்ள விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, பி.பி.டி.5204, ஏ.டி.டி.39, சாவித்திரி ரக நெல்லையை விவசாயிகள் விரும்பி வாங்குகின்றனர். விவசாயிகள் விதை நெல் வாங்கும் போது, சான்று பெற்ற விதைகளையே வாங்க வேண்டும். நெல் மூட்டை மீது சான்றட்டை மற்றும் உற்பத்தியாளர் விவர அட்டை உள்ளதா, குறைந்தபட்ச முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை உள்ளதா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். விதைகள் வாங்கும் போது நெல் ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி உள்ளிட்ட விபரங்களுடன் விற்பனை ரசீது கேட்டு வாங்க வேண்டும். விதையின் முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை குறைவாக இருந்தால் இந்த ரசீதுகள் மூலமே இழப்பீடு தொகை பெற முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.