/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு தலை தூக்கும் ஆக்கிரமிப்புகாற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு தலை தூக்கும் ஆக்கிரமிப்பு
காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு தலை தூக்கும் ஆக்கிரமிப்பு
காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு தலை தூக்கும் ஆக்கிரமிப்பு
காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு தலை தூக்கும் ஆக்கிரமிப்பு
ADDED : செப் 04, 2011 09:39 PM
வேடசந்தூர்:வேடசந்தூர் ஆத்துமேடு, கடை வீதி, வடமதுரை ரோட்டில்
ஆக்கிரமிப்புக்கள் அதிகம்.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து
தினமலர் இதழ் பல முறை சுட்டிக்கட்டியது.
சமீபத்தில், கலெக்டர் நாகராஜனின்
கார் போக்குவரத்து சிக்கலில் சிக்கியது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற
உத்தரவிட்டார். அடுத்த நாள், 'தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,'
என, அதிகாரிகள் கூறினர்; தானாக முன்வந்து பலர் அகற்றினர். வடமதுரை ரோட்டில்
அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.அவை முழுமையாக அகற்றப்படவில்லை. சில
பிரச்னைகள் ஏற்பட்டன. 'முறையாக அளந்து நோட்டீஸ் கொடுக்காமல் ஆக்கிரமிப்பை
அகற்றியதால் பிரச்னை எழுந்தது,' என, அதிகாரிகள் விளக்கம்
அளித்தனர்.இச்சம்பவம் நடந்து இரண்டு மாதம் முடிந்த நிலையில்,
ஆக்கிரமிப்புகள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற
பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டது தான் மிச்சம். இப்பிரச்னையில்
கலெக்டரின் உத்தரவு காற்றில் பறந்து விட்டது. இதில் கலெக்டர் நேரடியாக களம்
இறங்க வேண்டும்.


