Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வாகனங்களில் புதிய நம்பர் எழுத நாளை கெடு முடிகிறது எழுதாத வாகனங்களை சிறை பிடிக்க உத்தரவு

வாகனங்களில் புதிய நம்பர் எழுத நாளை கெடு முடிகிறது எழுதாத வாகனங்களை சிறை பிடிக்க உத்தரவு

வாகனங்களில் புதிய நம்பர் எழுத நாளை கெடு முடிகிறது எழுதாத வாகனங்களை சிறை பிடிக்க உத்தரவு

வாகனங்களில் புதிய நம்பர் எழுத நாளை கெடு முடிகிறது எழுதாத வாகனங்களை சிறை பிடிக்க உத்தரவு

ADDED : ஆக 31, 2011 12:27 AM


Google News

தூத்துக்குடி : வாகனங்களில் அரசு உத்தரவுப்படி நம்பர் எழுதாவிட்டால் உடனடியாக அந்த வாகனங்களை சிறைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இது சம்பந்தமான அதிரடி நடவடிக்கைக்கு போக்குவரத்து அதிகாரிகள் ஆயத்தமாகி உள்ளனர். தமிழகத்தில் புதிய முறைப்படி இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் எழுத வேண்டும் என்றும், நம்பர் போர்டில் நம்பரை தவிர வேறு எந்த எழுத்துக்களும் இருக்க கூடாது என்று தமிழக அரசு போக்குவரத்துதுறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து அதிகாரிகள் இது சம்பந்தமான வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் ஆஷிஷ்குமார் அறிவுரைப்படி வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகர், பாத்திமாபர்வீன், ராஜேஷ் ஆகியோர் இது சம்பந்தமாக வாகன சோதனை மேற்கொள்ளும் போது வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசென்ஸ் எடுக்க வருவோரிடமும் இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் வாகனங்களில் எந்த வகையில் நம்பர் எழுத வேண்டும் என்று விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகளும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டது. இதற்கிடையில் இது சம்பந்தமாக அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து தூத்துக்குடியிலும் இது சம்பந்தமாக சோதனை நடந்தது. அரசு உத்தரவுப்படி நம்பர் பிளேட் எழுதாத வாகனங்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டன. இதே போல் திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டியிலும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந் நிலையில் இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய நம்பர்பிளேட் குறித்த சோதனை எவ்வளவு நடந்துள்ளது. அறிக்கை கொடுத்தவர்கள் புதிய நம்பர் பிளேட் எழுதியுள்ளனரா என்று போக்குவரத்துதுறை சார்பில் கேட்கப்பட்டு, எழுதாத வாகனங்களை சிறைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாகனங்களை கண்டறியும் பணியில் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந் நிலையில் புதிய நம்பர் பிளேட் எழுதுவதற்கு அரசு விதித்துள்ள கெடு நாளையுடன் முடிகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இது சம்பந்தமாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் போலீசுடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் காலை, மாலை இரண்டு நேரங்களில் போலீசுடன் இணைந்து இது சம்பந்தமான சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் ஏற்பாடு செய்து வருவதாக ஆர்.டி.ஓ அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us