விருத்தாசலம் : கம்மாபுரத்தில் தே.மு.தி.க., கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலர் ராஜவன்னியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலர் தென்னவன், ஒன்றிய தலைவர் ஜான்லியோ, தனவேல், கவுன்சிலர் ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சிவகொழுந்து எம்.எல்.ஏ., கொடியேற்றி பேசினார். நிர்வாகிகள் கனகசிகாமணி, ஞானபாண்டியன், ஆதிவராகவன், வெங்கடேசன், அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.