/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் மாநில வாள் விளையாட்டு போட்டிசிவகங்கையில் மாநில வாள் விளையாட்டு போட்டி
சிவகங்கையில் மாநில வாள் விளையாட்டு போட்டி
சிவகங்கையில் மாநில வாள் விளையாட்டு போட்டி
சிவகங்கையில் மாநில வாள் விளையாட்டு போட்டி
ADDED : ஆக 26, 2011 11:27 PM
சிவகங்கை : சிவகங்கையில் ஜூனியர், கேடட் பிரிவு மாணவர்களுக்கான 9வது மாநில வாள் விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது.வாள் விளையாட்டு கழக மாநில தலைவர் ஜான்நிக்கல்சன் தலைமை வகித்தார்.
மன்னர் பள்ளிகளின் முகவாண்மை குழு உறுப்பினர் மகேஷ்துரை, பள்ளி செயலர் குமரகுரு, தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.சென்னை, திருவள்ளூர், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 22 மாவட்டங்களில் இருந்து தலா 48 பேர் வீதம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.இங்கு 14 மற்றும் 17வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 'எப்பி', 'சேபர்', 'பாயில்' என மூன்று வித போட்டிகள் நடக்கிறது. ஆக.,28 வரை போட்டிகள் நடக்கிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். வாள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.


