/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் மாவட்டத்தில் 50,000 மரக்கன்று நட திட்டம்பெரம்பலூர் மாவட்டத்தில் 50,000 மரக்கன்று நட திட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 50,000 மரக்கன்று நட திட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 50,000 மரக்கன்று நட திட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 50,000 மரக்கன்று நட திட்டம்
ADDED : ஆக 26, 2011 12:47 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், 1000 மரக்கன்று நடும் விழா நடந்தது.
விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் வினோத் முன்னிலை வகித்தார். விழாவில், சி.இ.ஓ., ராஜன் பங்கேற்று மரக்கன்றுநட்டு வைத்து பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு பாட்டை தவிர்க்கவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகர் மற்றும் கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்று நட அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் 95 அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4,750 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல், 40 அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2,000 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பள்ளிகளில் மரக்கன்றுகளை நட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 1,000 மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கோபால் உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பசுமைப்படையினர், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பெருமாள் வரவேற்றார். ஆசிரியர் காளிமுத்து நன்றி கூறினார்.