Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கனரக வாகனங்களுக்குஇரவு 9.30 மணிவரை தடை

கனரக வாகனங்களுக்குஇரவு 9.30 மணிவரை தடை

கனரக வாகனங்களுக்குஇரவு 9.30 மணிவரை தடை

கனரக வாகனங்களுக்குஇரவு 9.30 மணிவரை தடை

ADDED : ஆக 23, 2011 11:43 PM


Google News
ஆலந்தூர்:ஜி.எஸ்.டி., சாலையில்,கனரக வாகனங்கள், இரவு 9.30 மணி வரை செல்ல தடை விதித்து, சென்னை புறநகர் கமிஷனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., சாலை, வேளச்சேரி சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், கனரக வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், புறநகரில் அதிகரித்து வரும் வாகன விபத்துகளாலும், நெரிசலாலும் கனரக வாகனங்களுக்கான தடையை, மேலும் ஒன்றரை மணி நேரம் நீட்டித்து, கமிஷனர் ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, கனரக வாகனங்கள் இச்சாலைகளில், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை செல்லக்கூடாது என்று, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீறி நுழையும் வாகனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us