Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலவச "லேப்-டாப்' திட்டத்துக்கு சிறப்பு கமிட்டி:மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

இலவச "லேப்-டாப்' திட்டத்துக்கு சிறப்பு கமிட்டி:மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

இலவச "லேப்-டாப்' திட்டத்துக்கு சிறப்பு கமிட்டி:மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

இலவச "லேப்-டாப்' திட்டத்துக்கு சிறப்பு கமிட்டி:மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

ADDED : ஆக 11, 2011 11:21 PM


Google News
கோவை : ''மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச 'லேப்-டாப்' வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,'' என்று மாவட்ட வருவாய் அலு வலர் கற்பகம் தெரிவித்தார்.மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவசமாக 'லேப்-டாப்' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள் ளது.

செப்., 15ல் இத்திட்டம் துவக்கி வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் கூறியதாவது: மாவட்டத்தில் எத்தனை மாணவ, மாணவியர் இலவச 'லேப்-டாப்' கம்ப்யூட்டர் பெற தகுதியானவர்கள் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கமிட்டி அளிக்கும் பட்டியலின்படி லேப்-டாப் வழங்கப்படும். இதே போல், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, ஆடு அல்லது மாடு வழங்கும் திட்டமும் செப்., 15ல் துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான பயனாளிகளின் பெயர்களை தேர்வு செய்யவும் ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சொந்த நிலம் இல்லாதவர்கள், 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள், சொந்தமாக வேறு கால்நடைகள் இல்லாதவர்கள், மத்திய, மாநில அரசு வேலையில் இல்லாதவர்கள், விதவையர், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை 240 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 13 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியல் ஆக.,15ல் நடைபெறும் கிராம சபையில் வெளியிடப்படும். ஆடு, மாடுகளின் உடல் நிலையை மாதம் ஒருமுறை கால்நடை டாக்டர் பரிசோதிப்பார். இலவச மிக்சி, கிரைண்டர்கள் ரேஷன் கடைகளில் அரிசி வாங்க தகுதி உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன்படி மாவட்டத்தில் 10 லட்சத்து 64 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.இவ்வாறு, கற்பகம் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us