/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விவசாய சங்க மாநில மாநாடு தாராபுரத்தில் ஆக.20ல் துவக்கம்விவசாய சங்க மாநில மாநாடு தாராபுரத்தில் ஆக.20ல் துவக்கம்
விவசாய சங்க மாநில மாநாடு தாராபுரத்தில் ஆக.20ல் துவக்கம்
விவசாய சங்க மாநில மாநாடு தாராபுரத்தில் ஆக.20ல் துவக்கம்
விவசாய சங்க மாநில மாநாடு தாராபுரத்தில் ஆக.20ல் துவக்கம்
ADDED : ஆக 05, 2011 02:05 AM
ஈரோடு: தாராபுரத்தில் ஆகஸ்ட் 20ல், மாநில விவசாய சங்கத்தின் மாநில மாநாடு துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.தமிழ் மாநில விவசாய சங்க மாநில பொது செயலாளர் முத்தரசு ஈரோட்டில் கூறியதாவது: தமிழ்நாடு விவசாய சங்க மாநில மாநாடு, தாராபுரத்தில் ஆகஸ்ட் 20ல் நடக்கிறது.
22ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. கம்யூனிஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன், தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, தஞ்சை பல்கலை பேராசிரியர் ராமநாதன், எம்.பி., சுப்பராயன், அகில இந்திய பொது செயலாளர் நாகேந்திரநாத் ஓஷா, தேசிய துணை தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்தியா முழுவதும் 16 கோடி பேரும், தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேரும் விவசாய தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால் விவசாய தொழிலாளர்களுக்கு என்று தனியாக ஒரு துறையோ, அமைச்சரோ இல்லை. விவசாய தொழிலாளருக்கு தனியாக துறை ஒதுக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம், மாநாட்டில் நிறைவேற்றப்படும். நில உச்ச வரம்பின் படி பெறப்பட்ட நிலங்களை மீட்டு, நிலமில்லாத ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மேலும் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டு பேரணி ஆகஸ்ட் 22ல் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மாநில செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் வெங்கடாசலம், செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.