தினமலர் சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சி : நாளை தமுக்கம் மைதானத்தில் துவங்குகிறது
தினமலர் சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சி : நாளை தமுக்கம் மைதானத்தில் துவங்குகிறது
தினமலர் சார்பில் மாபெரும் வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சி : நாளை தமுக்கம் மைதானத்தில் துவங்குகிறது
மதுரை : தினமலர், எல்ஜி., சினிமா 3டி ஸ்மார்ட் 'டிவி' மற்றும் ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்கும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி (ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ) நாளை முதல் ஆக.,8 வரை, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
நாவிற்கு சுவையூட்ட திண்டுக்கல் வேணு பிரியாணியின் வகைகள், டோமினோ பீசா, கிராமிய, பிற மாநில உணவு வகைகள், 50க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம், பழரச வகைகள் கிடைக்கும். மெகந்தி, எம்பிராய்டரி, அழகுக்லையும் பெண்களைக் கவரும். இதற்காக பெண்கள் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் குதூகலிக்க 'கிட்ஸோன்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குட்டீஸ்களுக்கு இலவச பலூன்கள் கிடைக்கும். உங்களை அப்படியே ஓவியமாக வரைதல், அரிய இன நாய்களின் கண்காட்சி, சிறுவர்களை மகிழ்விக்கும் கிரிக்கெட் பவுலிங் மெஷின், திகைப்பூட்டும் திகில் மாளிகை கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
மீன் கண்காட்சி : வண்ண, வண்ண கடல் மீன்களின் விளையாட்டும், ஆழ்கடல் அரிய வகை உயிரினங்களின் அதிசய உலாவும், நம்மை ஆச்சர்யப்படுத்தும். கண்காட்சிக்குள், ஏகப்பட்ட கண்கொள்ளா காட்சிகள் ஒவ்வொரு ஸ்டால்களிலும் நிறைந்துள்ளன. ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்கவும், மகிழ்ச்சியான, லாபகரமான ஷாப்பிங் அனுபவத்தை தரவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
நாளை முதல் 8 ம் தேதி வரை, தினமும் காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடக்கிறது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணம் 30 ரூபாய். கண்காட்சியை கலெக்டர் சகாயம் திறந்து வைக்கிறார். மீன் கண்காட்சி அரங்கினை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் திறந்து வைக்கிறார். அபி இம்போர்ட்டட் பர்னிச்சர், தேசிய சணல் வாரியம், பஞ்சாராஸ் பேஸியல், பட்டர் பிளை, அனிதா ஸ்டோர்ஸ், ராம்ராஜ் வேட்டிகள், காளீஸ்வரி ரீபைனரி பிரைவேட் லிமிடெட், பான் பான், சபோல் வாட்டர் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.