வழக்குகளை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் சக்சேனா மனு
வழக்குகளை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் சக்சேனா மனு
வழக்குகளை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் சக்சேனா மனு
சென்னை: மேலும் மூன்று வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா மனு தாக்கல் செய்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சக்சேனா. சினிமா படங்கள் வினியோக உரிமை தொடர்பாக, இவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, சக்சேனா கைது செய்யப்பட்டார். மோசடி செய்ததாகவும், மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு வழக்குகளில் சுமுக தீர்வு ஏற்பட்டதால், வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். புகார் கொடுத்தவர்களும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சக்சேனா மீதான இந்த இரண்டு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் மூன்று வழக்குகளை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் சக்சேனா தனித்தனியே மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று நீதிபதி சுதந்திரம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி சுதந்திரம் தள்ளி வைத்தார்.