/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொங்கணாபுரம் விற்பனை சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு பருத்தி விற்பனைகொங்கணாபுரம் விற்பனை சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம் விற்பனை சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம் விற்பனை சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம் விற்பனை சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு பருத்தி விற்பனை
ADDED : ஆக 01, 2011 04:11 AM
இடைப்பாடி : கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கடந்த மூன்று
நாட்களில், 15 ஆயிரம் பருத்தி மூட்டைகள், 2 கோடி ரூபாய்க்கு ஏலம்
போனது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில், சனிக்கிழமைதோறும் பருத்தி ஏலம்
நடக்கிறது. பருத்தி வரத்து அதிகம் உள்ள நேரங்களில், வெள்ளி, சனி, ஞாயிறு
ஆகிய மூன்று நாட்கள் ஏலம் நடக்கும்.இங்கு நடக்கும் பருத்தில் ஏலத்தில்,
பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் கலந்துகொள்வர். மற்ற இடங்களை
காட்டிலும் இங்கு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்து வருவதால், ஏராளமான
விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கடந்த வெள்ளி,
சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் நடந்த பருத்தி ஏலத்தில், 15 ஆயிரம்
பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. அதில், பி.டி ரக பருத்தி, 100 கிலோ
மூட்டை, 3,050 முதல், 3,550 ரூபாய் வரையும், ஆர்.சி.எச் ரக பருத்தி,
மூட்டைக்கு, 3,650 முதல், 4,250 ரூபாய் வரையிலும், சுரபி ரக பருத்தி
மூட்டைக்கு, 3,600 முதல், 4,400 ரூபாய் வரையும், எம்.சி.5 ரக பருத்தி
மூட்டைக்கு, 3,350 முதல், 4,200 ரூபாய் வரையும் ஏலம் போனது.கடந்த மூன்று
நாட்களில் மட்டும், 2 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது
குறிப்பிடத்தக்கது.