Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் மூடப்படாத பெரும் பள்ளத்தால் மக்கள் அவதி

தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் மூடப்படாத பெரும் பள்ளத்தால் மக்கள் அவதி

தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் மூடப்படாத பெரும் பள்ளத்தால் மக்கள் அவதி

தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் மூடப்படாத பெரும் பள்ளத்தால் மக்கள் அவதி

ADDED : ஆக 01, 2011 02:31 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே தேரடி அருகே கழிவுநீர் குழாய் சரி செய்ய தோண்டப்பட்ட மிகப் பெரிய பள்ளம் இன்னும் மூடப்படாததால் முக்கிய தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கே õயிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரதான பகுதிகள் என்பது சிவன்கோயில், பெருமாள் கோயில் சுற்றியுள்ள பகுதிகள். இந்த பகுதியில் ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம், ஆட்கள் நடமாட்டம் என்பது மிக அதிகமாக இருக்கும். காலை, மாலை நேரங்களில் தெருக்களில் நடமாட முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதும். அதுவும் பிரதோஷ நாட்கள், கோயில் திருவிழா நாட்களில் சிவன் கோயில் எதிரே உள்ள தெருவில் நிற்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயில் முன்பகுதியில் உள்ள தெருவில் சாக்கடை சுத்தம் செய்ய தேர் நிற்கும் இடத்தின் அருகே பெரிய பள்ளம் தோண்டி பணிகள் செய்யப்பட்டது.



ஆனால் அந்த பள்ளம் இன்னும் மாநகராட்சியால் மூ டப்படவில்லை. சாக்கடை சுத்தம் செய்யும் பணி நிறைவு பெற்றதா, நிறைவு பெறவில்லையா என்பது தெரியவில் லை. ஆனால் தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்திற்கும், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மிகு ந்த ஆபத்தான பயணத்தில் தா ன் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலை தான் காணப்படுவதாக பக்தர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்த ரோட்டை தாண்டித் தான் மெயின் ரோடு, இரண்டாம் கேட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகியவற்றிற்கு செல்ல வேண்டியுள் ளது. இதனால் இந்த ரோடு எப்போதும் பிசியாக காணப்படும். முக்கு சந்திப்பில் அமைந்துள்ள இந்த பள்ளத்தை மூடாமல் மாநகராட்சி ஏன் வேடிக்கை பார்க்கிறது என்பது தெரியவில்லை. ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்குள் இந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று இந்த பகுதி வியாபாரிகள், பக்தர்கள், பொ துமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். மக்களின் நியாயமான கே õரிக்கையை மாநகராட்சி உட னே நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us