Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கல்விக் கட்டணம் செலுத்த வேலை செய்யும் மாணவி

கல்விக் கட்டணம் செலுத்த வேலை செய்யும் மாணவி

கல்விக் கட்டணம் செலுத்த வேலை செய்யும் மாணவி

கல்விக் கட்டணம் செலுத்த வேலை செய்யும் மாணவி

ADDED : ஆக 01, 2011 02:05 AM


Google News
சோழவந்தான்:சோழவந்தானை சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவி பொன்னீஸ்வரி(17) கல்லூரியில் கட்டணம் செலுத்த வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கிறார்.

விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னுச்சாமியின் மகள் பொன்னீஸ்வரி. சில ஆண்டுகளுக்கு முன் தந்தையும், தாயும் இறந்தனர். பெற்றோர் இல்லாததால் மேல்நிலை கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டார். சோழவந்தான் அருகே தென்கரையில் பாட்டி தனலட்சுமியுடன்(64) தற்போது இவர் வசிக்கிறார். தனலட்சுமி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து அதில் கிடைத்த கூலி தொகையில் பொன்னீஸ்வரியை சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வை முடிக்க வைத்தார். பொன்னீஸ்வரிக்கு பரவை மங்கையர்க்கரசி கல்லூரியில் பி.எஸ்.சி.,(கணிதம்)சீட் கிடைத்தது. கல்லூரி சேர்க்கை கட்டணம், பஸ், புத்தகம், படிப்பு தொடர்பாக மூன்று ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. தனலட்சுமியிடம் அந்தளவுக்கு வசதியில்லை. இதனால் பொன்னீஸ்வரி பணம் கட்ட வழியின்றி, கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளார். தற்போது பாட்டியுடன் பொன்னீஸ்வரியும் வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கிறார். இவரின் படிப்புக்கு உதவ விரும்புவோர் மொபைல் போனில் (98659 95883) தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us