/உள்ளூர் செய்திகள்/தேனி/குப்பைகளை கொட்டுவதால் நோயாளிகள் பாதிப்புகுப்பைகளை கொட்டுவதால் நோயாளிகள் பாதிப்பு
குப்பைகளை கொட்டுவதால் நோயாளிகள் பாதிப்பு
குப்பைகளை கொட்டுவதால் நோயாளிகள் பாதிப்பு
குப்பைகளை கொட்டுவதால் நோயாளிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 25, 2011 10:27 PM
தேனி : தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி பின் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் நோயாளி கள் பாதிப்படைகின்றனர்.
தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குப்பை கிடங்கு வசதி உள்ளது. ஆஸ்பத்திரி குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இவற்றை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில்லை. மருத்துவக் கல்லூரி நிர்வாகமே குப்பைகளை அள்ளி வேறு இடத்தில் கொட்டி வருகிறது. ஆஸ்பத்திரி அருகில் கிராமங்கள் இருப்பதால் எந்த கிராம மக்களும் ஆஸ்பத்திரி குப்பைகளை தங்கள் பகுதியில் கொட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் ஆஸ்பத்திரி குப்பை கிடங்கிற்குள் கொட்டி வைத்துள்ளனர். இவற்றால் துர்நாற்றம் வீசு கிறது. ஆஸ்பத்திரி உள் நோயாளிகளாக இருப் பவர்களுக்கு மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கலெக்டர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.