ADDED : ஜூலை 25, 2011 02:01 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கராம்பாளையம் பல்நோக்கு சமூக சேவா சங்கம், உதயம் கூட்டமைப்பு சார்பில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடந்தது.கோவை மாவட்ட துணை இயக்குனர் பூபதி உத்தரவின் பேரிலும், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜய் மேற்பார்வையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு உதயம் பெண்கள் கூட்டமைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் விக்டோரியா வரவேற்றார்.
மக்கள் தொகை பற்றிய நிலவரம், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் நெருக்கடி, உணவு பற்றாக்குறை, இருப்பிட வசதி குறைவு போன்றவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.இதுகுறித்து கண்காட்சி நடந்தது. குடும்ப நலம் முறைகள் பற்றியும் பெண்களுக்கு விளக்கப்பட்டது. இதில், வட்டார விரிவாக்கக் கல்வியாளர்கள் ஜோதிமணி, மதியழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகஜோதி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், வட்டார புள்ளியாளர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். பிரேமா நன்றி கூறினார்.