ஜெகன் சொத்துக்கள்: சி.பி.ஐ.விசாரணைக்கு கோர்ட் உத்தரவு
ஜெகன் சொத்துக்கள்: சி.பி.ஐ.விசாரணைக்கு கோர்ட் உத்தரவு
ஜெகன் சொத்துக்கள்: சி.பி.ஐ.விசாரணைக்கு கோர்ட் உத்தரவு
UPDATED : ஜூலை 13, 2011 06:38 AM
ADDED : ஜூலை 13, 2011 02:48 AM
ஐதராபாத்: வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஓய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா எம்.பி.யுமான ஜெகன் மோகன்ரெட்டி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் இது தொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கர்ராவ் , தற்போது அமச்சராக உள்ளார். இவர் ஐகோர்டில் பொது நலவழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சியின் (2004-2009) போது கடப்பா எம்.பி.யாக இருந்தவர் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, வருவாய்க்கு அதிகமாக முறைகேடான ரூ.பல கோடி சொத்து சேர்த்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ . விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் கே.கே. ஷெர்வானி ஆஜரானார். நீதிபதிகள் நசீர் அகமது காக்ரூ, அப்சல்புரூகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் வக்கீல் ஷெர்வானி வாதிடுகையில், கடந்த மார்ச் 2004-ம் ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலில் ஜெகன்மோகனி்ன் சொத்து விபரம் ரூ. 11 லட்சமாக இருந்தது . இன்று 43 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துமதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி 40 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். சொந்தமாக டி.வி. சானலும் நடத்துகிறார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணமும் பதுக்கி வைத்துள்ளார். இவை அனைத்தும் முறைகேடான வழியில் சட்டவிரோதமாக சேர்த்தது. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார். முன்னதாக இந்த வழக்கில் ஜெகன் சார்பில் ஆஜரான வக்கீல் ராக்கேஷ் திவேதி வாதிடுகையில், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார். நீதிபதிகள் மறுத்தனர். இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. இரண்டு வாரங்களில் விசாரணை நடத்தி , மூடி முத்திரையிட்ட கவர் ஒன்றில் அறிக்கையினை சமர்ப்பி்க்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதே போன்று தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் எர்ரான்நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.


