ADDED : ஜூலை 24, 2011 11:49 PM
மேலூர் : மேலூர் அருகே கோட்ட நத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மனவளக் கலை பயிற்சி முகாம் நான்கு நாட்கள் நடந்தன.
தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி முகாமை துவக்கி வைத்தார். களப் பயணமாக முத்துபிடாரி அம்மன் கோயில் சென்ற மாணவர்கள், கோயில் வளாகத்தை சுத்தம் செய்தனர். அருகிலுள்ள மலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.


