வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
சேலம் : சேலம் வனத்துறை அலுவலகத்தில், வனக்காப்பாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.
சேலம் மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோவில்பிள்ளை கூறியதாவது:வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு இன்று (நேற்று) துவங்கியுள்ளது. 22 பேர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். ஆறு பணியிடத்துக்கான தேர்வு நடக்கிறது. ப்ளஸ் 2 தேர்வில், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் 163 செ.மீ., இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உடல் தகுதிக்கான தேர்வு நடந்து வருகிறது. நாளை (இன்று) காலை நடைத்தேர்வு நடக்கிறது. இரும்பாலை சாலையில், 25 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி நேரத்தில் கடந்து வர வேண்டும். காலை 5 மணிக்கு நடைத்தேர்வு துவங்குகிறது. இதன் பின், எழுத்துத்தேர்வு நடக்கிறது. இறுதியாக நேர்முகத்தேர்வு நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஆறு பேர், வனத்துறையில் வனக்காப்பாளராக நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.உடல் தகுதிக்கு தேர்வுக்கு வந்தவர்களிடம், வனத்துறை அதிகாரிகள் பெயர் சரி பார்ப்பு, சான்றிதழ் சரி பார்ப்பு, மதிப்பெண் விபரம் மற்றும் விளையாட்டு சான்றிதழ் போன்ற விபரங்களை கேட்டறிந்தனர்.