/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்
கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்
கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்
கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்
ADDED : ஆக 06, 2011 01:49 AM
ஆழ்வார்குறிச்சி : கடையம் அருகே அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த மினி லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.சேரன்மகாதேவி ஆர்டிஓ கருணாகரன் உத்தரவின் பேரில் அம்பை தாசில்தார் தியாகராஜன் அறிவுரையின்படி மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், கடையம் வருவாய் ஆய்வாளர் துரைராஜ், பொட்டல்புதூர் விஏஓ இசக்கியம்மாள், தலையாரி பாண்டி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது விக்கிரமசிங்கபுரத்திலிருந்து சுரண்டைக்கு அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த மினிலாரியை திருமலையப்பபுரத்திலிருந்து தெற்கு மடத்தூர் செல்லும் ரோட்டில் பிடித்தனர்.
டிரைவர் வடமலைசமுத்திரம் தேவராஜ் (28) என்பவரிடம் விசாரணை நடத்தி சுண்ணாம்புக்கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து கடையம் போலீசில் ஒப்படைத்தனர்.