/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்குபொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு
பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு
பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு
பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 30, 2011 11:49 PM
திட்டக்குடி : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 16 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திட்டக்குடி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராசு, 29, மணிகண்டன், 23.
இவர்களுக்கிடையே இருந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த சபரிநாதன், 22, வேல்முருகன், 24, நாகராஜ், 28, வெங்கடேஷ், 23, மணிகண்டன், 20 உட்பட 16 பேர் கும்பலாக நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது அவ்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல் இருதரப்பையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.


