Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் முதல் கட்ட விநியோகம் 1.15 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்

சேலத்தில் முதல் கட்ட விநியோகம் 1.15 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்

சேலத்தில் முதல் கட்ட விநியோகம் 1.15 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்

சேலத்தில் முதல் கட்ட விநியோகம் 1.15 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்

ADDED : செப் 16, 2011 01:38 AM


Google News

சேலம்: '' சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக, நடப்பாண்டில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை அடங்கிய, 'பேக்கேஜ்' வழங்கப்பட உள்ளது,'' என்று மாவட்ட கலெக்டர் மகரபூஷனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின், இலவச மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், லேப்-டாப், ஆடு, மாடு உள்ளிட்டவை, படிப்படியாக வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே மின்விசிறி பேக்கேஜ் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில், முதல் கட்டமாக, நடப்பாண்டில் மட்டும், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்குள், சேலம் மாவட்டத்தில் உள்ள, 70 கிராமங்களில், 5,396 நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட உள்ளது. வாழ்வாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் ஆடுகள் வழங்கப்படும். கிராமசபை கூட்டங்கள் மூலம், ஆடுகளை பெறுவதற்குரிய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, ஒரு கிடா, மூன்று பெண் ஆடுகள் வழங்கப்படும். ஆடுகளை பெற தகுதி உடைய நபர்கள் சந்தைக்கு அழைத்து செல்லப்பட்ட, அவர்கள் மூலமாக விலை நிர்ணயம் செய்து, தகுதி வாய்ந்த ஆடுகள், வாங்கி ஒப்படைக்கப்படும். பராமரிப்பு செலவுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.



சேலம் மாவட்டத்தில், 75 ஆயிரத்து, 262 மாணவர்கள், லேப்-டாப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். முதல் கட்டமாக, கோனேரிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, ப்ளஸ் 2 மாணவர்கள், 74 பேருக்கு லேப்-டாப் வழங்கப்பட உள்ளது. நாளை(இன்று) காலை 10 மணிக்கு, ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓலப்பாடி கிராமத்தில், இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11.30 மணிக்கு கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோவிந்தம்பாளையத்தில், 64 யூனிட்(ஒரு யூனிட்டுக்கு நான்கு ஆடுகள்) ஆடுகள் வழங்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆடுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.



செப்., 17 ம் தேதி காலை 10 மணிக்கு, இடைப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டி கிராமத்தில் இலவச லேப்-டாப் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11.30 மணிக்கு ஆடையூர் கிராமத்தில், 30 யூனிட் ஆடுகள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். முதல் கட்டமாக கிராமப்புறங்களில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. பிறகு, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



ஆடு வளர்ப்பு கண்காணிக்கப்படும்!



அரசால் வழங்கப்படும், இலவச ஆடுகளை, சம்மந்தப்பட்ட பயனாளிகள் இரண்டு ஆண்டுக்கு விற்பனை செய்யவோ, சமைத்து சாப்பிடவோ கூடாது. ஆடுகள் குட்டிகள் ஈன்றும் பட்சத்தில், அதை வேண்டுமானால், விற்பனை செய்து கொள்ளலாம். ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஆடுகளுக்கு, உடல் நலக்கோளாறு ஏற்படும் பட்சத்தில், மாவட்ட கால்நடை துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள், மருத்துவ உதவிகளை செய்வர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், இத்திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு மூலம், சம்மந்தப்பட்ட பயனாளிகளின் ஆடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்பட உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us