ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல உதவி வழங்கும் விழா
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல உதவி வழங்கும் விழா
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல உதவி வழங்கும் விழா
ADDED : ஆக 19, 2011 08:21 AM
கோவை: ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா, பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
'யூத் ஹெல்பிங்ஸ் ஹேன்ட்ஸ்' மற்றும் பி.எஸ்.ஜி.,சேவா சங்கம் சார்பில் கோவையிலுள்ள 18 ஆதரவற்ற குழந்தைகள் மையத்தில் இருந்து 800 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. எல்.கே.ஜி.,வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், உபகரணங்கள் உட்பட உதவிகள் வழங்கப்பட்டன.
110 பேரை யூத் ஹெல்பிங்ஸ் ஹேன்ட்ஸ், பி.எஸ்.ஜி.,சேவா சங்கம் தத்து எடுத்து கொண்டன. விருதுகள் வழங்கி, 120 பேர் கவுரவிக்கப்பட்டனர். ஊட்டி போலீஸ் டி.எஸ்.பி.,சக்கரவர்த்தி பரிசு வழங்கினார். மருதம் ஸ்டீல் நிறுவன சேர்மன் வீரப்பன், பார்வையற்றோருக்கான சமூக சேவகி மங்கை, யூத் ஹெல்பிங் ஹேன்ட்ஸ் சேர்மன் அருண், பி.எஸ்.ஜி.,சேவா தலைவர் ஹர்ஷவர்த்தன், உதவி தலைவர் சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.