ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் தெய்வத்தின் பிள்ளைகள் : பிரியங்கா
ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் தெய்வத்தின் பிள்ளைகள் : பிரியங்கா
ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் தெய்வத்தின் பிள்ளைகள் : பிரியங்கா
ADDED : செப் 28, 2011 01:39 PM

நடிகை பிரியங்கா சோப்ரா, அனுராக் பாசு இயக்கும் பர்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் ஆட்டிஸம் பாதித்த பெண்ணாக நடிக்கிறார். கதைக்கேற்ப ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுடன் ஒரு சில காட்சிகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது.
இதற்காக ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கான பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பிரியங்கா. அந்த குழந்தைகளுடன் பழகியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.
ரன்பிர்கபூர் ஹீரோவாக நடிக்கும் இப்படம் 2012 ஜனவரி மாதம் ரிலீசாகிறது.