/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுற்றுலாப்பயணிகள் வீடுகளில் தங்கும் திட்டம் : விண்ணப்பிக்க வாய்ப்புசுற்றுலாப்பயணிகள் வீடுகளில் தங்கும் திட்டம் : விண்ணப்பிக்க வாய்ப்பு
சுற்றுலாப்பயணிகள் வீடுகளில் தங்கும் திட்டம் : விண்ணப்பிக்க வாய்ப்பு
சுற்றுலாப்பயணிகள் வீடுகளில் தங்கும் திட்டம் : விண்ணப்பிக்க வாய்ப்பு
சுற்றுலாப்பயணிகள் வீடுகளில் தங்கும் திட்டம் : விண்ணப்பிக்க வாய்ப்பு
ADDED : ஆக 30, 2011 03:23 AM
மதுரை:சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்காமல், வீடுகளில் தங்குவதற்காக சுற்றுலாத் துறை, துவங்கிய உறை விடத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள வீட்டு உரிமை யாளர்கள் விண்ணப்பிக்கலாம்.சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் கலாச் சாரம், விருந்தோம்பலை தெரிந்து கொள்ளும் வகையில், மதுரையில் 2008ல் துவங்கிய உணவுடன் கூடிய உறை விட திட்டத்தில் 17 பேர் சேர்ந்தனர்.
சுற்றுலாத்துறையின் இணைய தளத்தில் இந்த முகவரிகளும் வெளியிடப் பட்டன. இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இத் திட்டத்தில் கூடுதலாக பலரையும் சேர்க்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற வசதியுள்ள வீடுகள் வைத்திருக்கும் உரிமை யாளர்கள், அனைத்து விபரங்களுடன் மதுரை சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், திடீர்நகர்,மதுரை - 1 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். போன்: 0452 - 233 4757.


