/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சியில் தக்காளி விளைச்சல் அமோகம்பொள்ளாச்சியில் தக்காளி விளைச்சல் அமோகம்
பொள்ளாச்சியில் தக்காளி விளைச்சல் அமோகம்
பொள்ளாச்சியில் தக்காளி விளைச்சல் அமோகம்
பொள்ளாச்சியில் தக்காளி விளைச்சல் அமோகம்
ADDED : செப் 01, 2011 01:55 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் தக்காளி விளைச்சல் அபரிமிதமாக இருப்பதால், சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 12 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று ஏழு ரூபாயாக குறைந்தது.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை ஆகிய பகுதிகளில், தக்காளி அதிகளவில் பயிரிடப்படப்படுகிறது. தக்காளி பயிரிடும்போது நீண்டகாலம் பயன்தரக்கூடிய 5005, 618, ருச்சி, ருசுச்சி, ஹைபீரிட், வைஷ்ணவி ஆகிய வீரிய வித்துகளை பயன்படுத்துவதால் விளைச்சலும் அதிகரித்து காணப்படுகிறது.இப்பகுதிகளில், ஆயிரம் ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தக்காளி பயிரிடும்போது, பயிருக்கு ஏற்ற நீர் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். மேட்டுபாங்கான இடங்களில் விளைவிக்கப்படும் தக்காளிக்கு கூடுதல் சுவையும் கிடைக்கிறது.தமிழகத்தின் மற்ற பகுதிகளில் விளையும் தக்காளியை விட, இப்பகுதிகளில் விளையும் தக்காளிக்கு தனி மவுசு உள்ளது. இதனால்,கேரள வியாபாரிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிறபகுதிகளில் இருக்கும் வியாபாரிகளும் பொள்ளாச்சி சந்தையில் ஏலம் எடுத்து செல்கின்றனர்.கேரளாவில் சித்தூர், திருச்சூர், வடக்கஞ்சேரி, பாலக்காடு, கொடுவாயூர்,கோட்டபுரம் போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. சந்தைக்கு வருவதில், கேரளாவிற்கு மட்டும் 70 சதவீதமும், மீதமிருப்பது தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.தற்போது, பொள்ளாச்சி, உடுமலை சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், இந்த வாரம் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்திருப்பதோடு, வெளியிடங்களுக்கு தக்காளி அனுப்புவதும் அதிகரித்துள்ளது. சந்தைக்கு, நேற்று மட்டும் 15 டன் தக்காளி வரத்து இருந்தது. இதில், கேரளாவுக்கு 10 டன் தக்காளி அனுப்பப்பட்டது.வரத்து அதிகரித்து வருவதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை சரிந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி நான்கு ரூபாய்க்கு ஏலம் போனது. சில்லரை வர்த்தகத்தில், கடந்த வாரம் 12 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று ஏழு ரூபாய்க்கு விற்றது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்,'இன்னும் இரு மாதங்களுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், விலையை பொறுத்தவரை ஏற்ற, இறக்க நிலையிலேயே இருக்கும், என்றனர்.