ADDED : ஜூலை 11, 2011 10:44 PM
ஊட்டி : நீலகிரி மாவட்ட ஈழுவர் தீயா நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்ட ஈழுவர் தீயா நல சங்க பொதுக்குழு கூட்டம் ஊட்டி கேரளா கிளப்பில் நடந்தது.
இதில்,தேர்தல் முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சாத்தப்பன், பொது செயலாளராக ராஜ்குமார், பொருளாளராக பிரகாஷ், துணை தலைவர்களாக ஜவகர்தாஸ் (ஊட்டி), சகாதேவன் (குன்னூர்), கிருஷ்ணன்குட்டி (கோத்தகிரி), ஜெயராஜ் (கூடலூர்), இணை செயலாளர்களாக மணிகண்டன் (ஊட்டி), விஷ்ணு (காத்தாடிமட்டம்), லட்சுமணன் (கேத்தி), செந்தாமரை (குந்தா), சட்ட ஆலோசகராக பாஸ்கர் (கூடலூர்) மற்றும் 30 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவ, மாணவியருக்கு பயன்படும் ஜாதி சான்றிதழ் பெற மாநில முதல்வரை நேரில் காண்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.