/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஏ.பி.எல்., அட்டைகள் தயாரிப்பில் ஆசிரியர்களிடம் ஆலோசனைஏ.பி.எல்., அட்டைகள் தயாரிப்பில் ஆசிரியர்களிடம் ஆலோசனை
ஏ.பி.எல்., அட்டைகள் தயாரிப்பில் ஆசிரியர்களிடம் ஆலோசனை
ஏ.பி.எல்., அட்டைகள் தயாரிப்பில் ஆசிரியர்களிடம் ஆலோசனை
ஏ.பி.எல்., அட்டைகள் தயாரிப்பில் ஆசிரியர்களிடம் ஆலோசனை
ADDED : செப் 01, 2011 01:59 AM
திருப்பூர் : சமச்சீர் பாடத்திட்டத்திற்கான செயல்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையில், புதிய அட்டைகள் வடிவமைப்பு குறித்து ஆசிரியர்களிடம் ஆலோசிக்கப்படுகிறது.துவக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கு செயல்வழி கற்றல், எளியமுறை படைப்பாற்றல் கல்வி மற்றும் படைப்பாற்றல் கல்வி முறை பின்பற்றப்படுகிறது.
ஒன்று மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்டைகள் மற்றும் கல்வி உபகரணங்களை கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது.இந்தாண்டு முதல் சமச்சீர் கல்வித்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டுவரப்பட்டது. புதிய பாடத்திட்ட புத்தங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாடத்திட்டத்திற்கான அட்டைகள் இன்னும் வழங்கப்படவில்லை.பொது அட்டைகளை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், புதிய அட்டைகள் தயாரிப்பிற்கான ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பாடத்திட்டத்தில் அட்டைகள் பயன்படுத்தும் இடம், அட்டைகள் வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை ஆராய்ந்து, அட்டைகள் தயாரிக்கும் பணி துவங்க உள்ளது.