ஓ.இ., மில்கள் இன்று முதல் ஸ்டிரைக்
ஓ.இ., மில்கள் இன்று முதல் ஸ்டிரைக்
ஓ.இ., மில்கள் இன்று முதல் ஸ்டிரைக்
ADDED : செப் 04, 2011 11:07 PM
திருப்பூர் : 'விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளதால், நூல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.
நூலுக்கு
கட்டுப்படியான விலை வழங்க வேண்டும்,' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஓ.இ.,
மில்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
வெள்ளகோவில், உடுமலை ஓப்பன் என்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் கூட்டம்,
தலைவர் கிட்டுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 'ஓப்பன் என்ட்
ஸ்பின்னிங் மில்களில் உற்பத்திக்கு மூலப்பொருளாக உள்ள கழிவுப்பஞ்சு விலை
வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பல்லடம், அவினாசி, சோமனூர் பகுதி
விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நூல்கள்
விற்பனையாகாமல் மில்களில் தேக்கம் அடைந்துள்ளன. நூலுக்கு கட்டுப்படியான
விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,
அனைத்து ஓ.ஈ., மில்களும் இன்று (5ம்தேதி) முதல் உற்பத்தி நிறுத்த
போராட்டத்தில் ஈடுபடுகின்றன,' என தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெள்ளகோவில் ஓ.இ., மில் அசோசியேஷன் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர்
சிவாச்சலமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.