Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

ADDED : ஜூலை 27, 2011 02:22 AM


Google News
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே கண்மாய் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி ஊருக்கு தென்மேற்கே ஐயர் தோட்டத்திற்கு தெற்கேயுள்ள கண்மாய் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமான், கணேசன், இசக்கிமுத்து, ஏட்டு இளங்கோவன் ஆகியோர் கொண்ட போலீஸ் படையினர் ரோந்து சென்றனர். அப்போது குறிப்பிட்ட பகுதியில் மணல் அள்ளிக் கொண்டு வந்ததாக ஒரு டிராக்டரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மணல் அள்ளியதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லையென கூறப்படுகிறது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டர் டிரைவரான குருமலை அருகேயுள்ள கழுகாசலபுரம் கீழுர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல்சாமி மகன் கருப்பசாமியை (24) கைது செய்து கோவில்பட்டி ஜேஎம்2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் செல்வம் கருப்பசாமி, கயத்தாறு செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us