ADDED : ஜூலை 24, 2011 03:38 AM
பரங்கிமலை:புதுச்சேரியில் இருந்து, மதுபாட்டில்களை கடத் திய பெண்ணை,
போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மதுபாட்டில்களை, சிலர் கடத்தி வந்து
விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, கூடுதல் துணை கமிஷனர் ஜெயகுமார்
தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வேங்கைவாசல் ஏரிக்கரையில் கண்காணித்துக் கொண்டிருந்த போது, கம்சலா, 53 என்ற
பெண், புதுச்சேரி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது
தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 39 மதுபாட்டில்களை
பறிமுதல் செய்தனர். மேலும், சேலையூர், மகாலட்சுமிநகரில் உள்ள, அரசு அனுமதி
பெற்ற பாரில், மதுவில் தண்ணீரைக் கலந்து விற்பனை செய்த, காலாடிபேட்டையைச்
சேர்ந்த சஞ்சய், 27 என்பவரையும், புறநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு
போலீசார் கைது செய்தனர்.