உஸ்பெக்கில் நிலநடுக்கம் 13 பேர் பலி
உஸ்பெக்கில் நிலநடுக்கம் 13 பேர் பலி
உஸ்பெக்கில் நிலநடுக்கம் 13 பேர் பலி
ADDED : ஜூலை 20, 2011 09:06 PM
டாஷ்கென்ட்:உஸ்பெகிஸ்தானில், நேற்று 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 13 பேர் பலியாகினர்.
மத்திய ஆசியாவில் உஸ்பெகிஸ்தானின் பெர்கானா நகரின் தென்மேற்கே, கிர்கிஸ்தானை ஒட்டிய எல்லையில், 6.1 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பர்கானா மண்டலத்தில் பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்; 86 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.கடந்த 2008ம் ஆண்டில், இந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 70 பேர் பலியாகினர்.