தே.மு.தி.க., கூட்டணியில் இ.கம்யூ.,
தே.மு.தி.க., கூட்டணியில் இ.கம்யூ.,
தே.மு.தி.க., கூட்டணியில் இ.கம்யூ.,

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தே.மு.தி.க., கூட்டணியில் இணைந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணியாக போட்டியிட்டன.
இந்நிலையில், கடைசி வரையில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தே தீருவது என்ற குறிக்கோளுடன் 3 கட்ட பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் உடன்பாடு எட்டப்படாததால் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்தது. இதையடுத்து இன்று காலை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்திற்குச் சென்ற தா.பாண்டியன் தலைமையிலான நால்வர் குழுவுடன் விஜயகாந்த் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடன்பாடு மட்டுமே: தே.மு.தி.க.,வுடனான தங்களது உறவு ஒரு தேர்தல் கூட்டணி உடன்பாடு மட்டுமே என தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.