91 ஆயிரத்து 753 பேர் வேட்பு மனு தாக்கல்
91 ஆயிரத்து 753 பேர் வேட்பு மனு தாக்கல்
91 ஆயிரத்து 753 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 12:57 AM
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, இதுவரை 91 ஆயிரத்து 753 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், ஆயிரத்து 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரண்டாம் நாளில், 15 ஆயிரத்து 361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்றாவது நாளில், 25 ஆயிரத்து 723 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நான்காம் நாளான 25ம் தேதியன்று, அரசு விடுமுறை நாள் என்பதால், வேட்பு மனு தாக்கல் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. நல்ல நாள் என்பதால், மாநிலம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்தது. கிராமப்புறப் பகுதிகளில் மட்டும், 60 ஆயிரத்து 870 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நகர்ப் பகுதிகளில், 5 ஆயிரத்து 160 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நான்கு நாட்கள் வரை நடந்த வேட்புமனு தாக்கலில், மொத்தமாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட, இதுவரை 91 ஆயிரத்து 753 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.