அம்மாபேட்டையில் வேட்பு மனு தாக்கல்
அம்மாபேட்டையில் வேட்பு மனு தாக்கல்
அம்மாபேட்டையில் வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 26, 2011 11:52 PM
சேலம்: அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், அ.தி.மு.க.,வினர் மற்றும் சுயேட்சைகள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்தில், அ.தி.மு.க., சார்பில், 36வது வார்டுக்கு தாமரைசெல்வன், 38வது வார்டுக்கு மாணிக்கம், 39வது வார்டுக்கு மனோகரன், 41வது வார்டுக்கு கீதா அன்பழகன், 43வது வார்டுக்கு லலிதா செந்தில்குமார் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 33வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளர் நூருதின், 37வது வார்டுக்கு பா.ஜ., வேட்பாளர் செந்தில்குமார், இதே வார்டுக்கு, சி.பி.ஐ.எம்.எல்., வேட்பாளர் வேல்முருகன், 38வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளர் சரவணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.