/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உமரிக்காடு அரசு பள்ளியில் ஊக்கத்தொகை வழங்கும் விழா : அமைச்சர்கள் பங்கேற்புஉமரிக்காடு அரசு பள்ளியில் ஊக்கத்தொகை வழங்கும் விழா : அமைச்சர்கள் பங்கேற்பு
உமரிக்காடு அரசு பள்ளியில் ஊக்கத்தொகை வழங்கும் விழா : அமைச்சர்கள் பங்கேற்பு
உமரிக்காடு அரசு பள்ளியில் ஊக்கத்தொகை வழங்கும் விழா : அமைச்சர்கள் பங்கேற்பு
உமரிக்காடு அரசு பள்ளியில் ஊக்கத்தொகை வழங்கும் விழா : அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : செப் 18, 2011 11:52 PM
தூத்துக்குடி : தமிழக அரசின் திட்டமாகிய மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது.
உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெல்லா வரவேற்று பேசினார். உமரிக்காடு பஞ்.,தலைவர் லதா அன்பழகன் வாழ்த்தி பேசினார். விழாவில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500ம், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் என 278 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மாணவர்களின் பெயரில் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு ஊக்கத் தொகையை மாணவர்களுக்கு வழங்கினர். விழாவில் அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் அறிவித்தப்படி பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். நமது மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்க்க இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு ஊக்கத் தொகையாக வருடத்திற்கு ரூ.2 ஆயிரம் வரை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
உமரிக்காடு ஊர் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். விழாவில் மாவட்ட பஞ்.,தலைவர் சின்னத்துரை, அரசு அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், உமரிக்காடு கிராம விவசாய சங்க தலைவர் கந்தப்பழம், ஊர் பொதுமக்கள், நிர்வாகஸ்தர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் பரிமளா நன்றி கூறினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு, உமரிக்காடு ஊர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.