/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்தலுக்கு விருப்ப மனு தே.மு.தி.க., "விறுவிறு'தேர்தலுக்கு விருப்ப மனு தே.மு.தி.க., "விறுவிறு'
தேர்தலுக்கு விருப்ப மனு தே.மு.தி.க., "விறுவிறு'
தேர்தலுக்கு விருப்ப மனு தே.மு.தி.க., "விறுவிறு'
தேர்தலுக்கு விருப்ப மனு தே.மு.தி.க., "விறுவிறு'
ADDED : செப் 18, 2011 09:45 PM
காரமடை : காரமடை, சிறுமுகை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில்
போட்டியிட, தே.மு.தி.க.,வினர் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்து
வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால்,போட்டியிட
விரும்புவோரிடம் அரசியல் கட்சிகளின் சார்பில் விருப்ப மனுக்கள்
பெறப்படுகின்றன. காரமடை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள், 21 ஒன்றிய
கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. காரமடை பேரூராட்சியில்
தலைவர் மற்றும் 18 வார்டு உறுப்பினர்கள், சிறுமுகை பேரூராட்சியில் தலைவர்
மற்றும் 18 வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில், காரமடை
பேரூராட்சி, காங்.,வசமும், சிறுமுகை பேரூராட்சி, தி.மு.க., வசமும் உள்ளன.
ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் அ.தி.மு.க., எட்டும், தி.மு.க., காங்கிரஸ்
தலா மூன்றும், பா.ஜ., தே.மு.தி.க., சுயேட்சை ஆகிய கட்சிகள் தலா ஒரு
இடங்களையும் பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்கள் 21ல், அ.தி.மு.க.,-9,
தி.மு.க.,-5, காங்.,-4 கம்யூனிஸ்ட்டுகள்-2 சுயேட்சை-1 என்ற எண்ணிக்கையில்
பலம் கொண்டுள்ளன. இங்குள்ள 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளும் தற்போது
அ.தி.மு.க., வசமே உள்ளன. தற்போது பதவியில் உள்ள அ.தி.மு.க., ஊராட்சி
தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்கள் மீண்டும் அதே இடத்தில்
போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். இந்த இடங்கள் அனைத்தும்
'அ.தி.மு.க.,வின் கோட்டை' என்பதால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற
நம்பிக்கையும் இவர்களிடம் அதீதமாகக் காணப்படுகிறது; அதனால், இந்த இடங்களில்
அ.தி.மு.க., போட்டியிட வேண்டுமென்று தலைமைக்கு ஏராளமானவர்கள் மனுக்களை
அனுப்பி வருகின்றனர். இதேபோல, தே.மு.தி.க., வினர் பலரும் பெரும்
நம்பிக்கையுடன் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். தே.மு.தி.க.,
நிர்வாகிகள் கூறுகையில், 'மக்களிடையே எங்கள் கட்சிக்கு நல்ல வரவேற்பு
உள்ளதால், போட்டியிடும் இடங்களில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
காரமடை ஒன்றியத்தில் 6 ஊராட்சி தலைவர், 8 ஒன்றிய கவுன்சிலர், சிறுமுகை,
காரமடை பேரூராட்சி தலைவர், கவுன்சிலருக்கு போட்டியிட முடிவு செய்துள்ளோம்,
என்றனர்.