/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி பேரணிமழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி பேரணி
மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி பேரணி
மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி பேரணி
மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி பேரணி
ADDED : செப் 14, 2011 01:38 AM
அன்னூர்:அன்னூரில் என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., மாணவ, மாணவியரின்
பேரணி நடந்தது.பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை
அறிவுறுத்தியது.அதன்படி, அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரணியை தலைமை
ஆசிரியர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசுகையில்,''மழைநீர் சேகரிப்பதன்
மூலம், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்.
குளம், குட்டைகளுக்கும்
நீர்வரத்து பெருகும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம்
சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்க முடியும்,'' என்றார்.என்.சி.சி.,
ஆசிரியை சித்ரா முன்னிலை வகித்தார். பள்ளியில் துவங்கிய பேரணி அவிநாசி
மெயின் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. பிளாஸ்டிக்
பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மழை நீர் சேகரிப்பால் கிடைக்கும்
பயன்கள் குறித்த விளக்க அட்டையை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.


