ADDED : செப் 11, 2011 01:01 AM
மத்தூர்: மத்தூர் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த பெண் விஷம் குடித்து
தற்கொலை செய்து கொண்டார்.மத்தூர் அடுத்த முத்துநகரை சேர்ந்தவர் விவசாயி
கோவிந்தராஜ் (48).
இவரது மனைவி காளியம்மாள் (43). கணவன் மனைவிக்கிடையே
அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த இரு நாட்களுக்கு முன் வழக்கம்
போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த காளியம்மாள்
நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து
தற்கொலை செய்து கொண்டார். மத்தூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்
விசாரிக்கின்றார்.