/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் தயார்விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் தயார்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் தயார்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் தயார்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் தயார்
ADDED : ஆக 28, 2011 10:11 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் முதல்வாரத்தில், 530 சிலைகளை கொண்டு, பல்வேறு இடங்களில் 44 ஊர்வலங்கள் நடைபெறவுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக விநாயகர் சிலைகளை கொண்டு செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதில், கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிலை மாறி அமைதியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடந்து வருகிறது. அமைதியான வகையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்க, போலீஸ் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் செப்டம்பர் ஒன்று முதல் துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிலைகள் உள்ள இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 530 சிலைகள் வைக்கப்பட உள்ளன. இவற்றை கொண்டு திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 44 ஊர்களில் ஊர்வலங்கள் நடைபெறவுள்ளது. இவற்றில் திண்டுக்கல், பழநி ஊர்வலங்கள் பதட்டம் நிறைந்ததாக கருதி, அதிக கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சந்திரசேகரன் எஸ்.பி., கூறியதாவது: விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடந்தாண்டு எந்த முறை பயன்படுத்தப்பட்டதோ, அதே முறை பின்பற்றப்படவுள்ளது.வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலத்தை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சம்பந்தப்பட்ட அமைப்புகள் நடத்தி முடிக்கவேண்டும், என்றார்.