/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2011 11:01 PM
கடலூர் : பிரதமர், நீதிபதிகள் உள்ளடங்கிய அனைவரையும் லோக்பாலில் உள் ளடக்கிட வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேர்மை தீபம் ஏற்றி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலர் புரு÷ஷாத்தமன் வரவேற்றார். பொதுச் செயலர் மருதவாணன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் மணிவண்ணன், மாயவேல், தனராஜ், கோமதி நாயகம், ரவிச்சந்திரன், சக்திவேல், பன்னீர்செல்வம், வரதன் பங்கேற்றனர். நேர்மையை வலியுறுத்தி தீபம் ஏற்றி கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.